சத்ச்சித் ஆனந்த விகிரகன் ஸ்வரூபன் இறைவன் ஆசிரியப்பா
சத்ச்சித் தானந்த மவன்பரப்பி ரம்மம்
பரமபத த்தில்பர வாசுதேவ னவன்
பரந்தாமன் வடிவழகன் சுவரூபன் அவனே
சூரிய சந்திரராய் ஒளிமய மானவன்
ஆதிகேச வன்கண்ணன் நாரணன் விட்டுவே
(விளக்கம்: இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாதான் பரப்ரம்மன்;
அவனே அழகு வடிவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதனாய் பரவாசுதேவனாய்
வைகுண்டத்தில் காட்சி தருகின்றான்; ஒளிமயமான அவனே சூரிய, சந்திரர்;
ஆதி கேசவன், கண்ணன், நாராயணனன் விஷ்ணு )