சின்ன பயலேசின்ன பயலே…

சின்ன பயலே..சின்ன பயலே…..
05 / 03 / 2024
சின்ன பயலே..சின்ன பயலே
உனக்கு ஒரு உண்மை
சொல்லிடுவேன் கேட்டிடு
உனக்கான அத்தனையும்
ஆண்டவன் படைத்துவிட்டான்
உழைக்க உறுதியான உடலும்
வேலை செய்திட இரண்டு கைகளும்
எட்டுவச்சி நடந்திட இரண்டு கால்களும்
கனவு கண்டிட இரண்டு கண்களும்
வலுவாய் ரத்தம் பாய்ச்ச இதயமும்
நேர்மறையாய் சிந்திக்க நல்ல மூளையும்
இனி எல்லாம் உன் சமத்து.
ஏன் இன்னும் அவனை இறைஞ்சுகிறாய்?
சக்தி அத்தனையும் உபயோகி
வீழ்ந்தாலும் எழுந்து
வீரமாய் போராடு
உன் காலில் நீ நின்று
உலகினை வென்றிடு

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (5-Mar-24, 7:17 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 36

மேலே