மனக்கண்ணில் நிலைக்கும் இனியாள்
கலித்துறை
தேமா +புளிமா +புளிமாங்காய் +புளிமா +புளிமா
அன்பும் அறிவும் இணைந்தங்கே அமைந்த அணங்கு
துன்பம் வரினும் துடைத்தங்கே நிலைக்கும் சிறப்பால்
என்றும் இருக்கும் துணையாக வருவாள் பொறையால்
என்றும் எனது மனக்கண்ணில் நிலைக்கும் இனியாள்!