குலோத்துங்க சோழன் கோவை - நூல் - ஆறாவது - பிரிவுழிக் கலங்கல்

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.

மூன்றாவது - வன்புறை.

அஃதாவது-தலைவி ஐயுற்றவழி ஐயந்தீரத் தலைவன் வற்புறுத்திக் கூறல்;

அஃது-ஐயந்தீர்த்தல், பிரிவறிவுறுத்தலென இருவகைப்படும்;

அவை: அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் முதல் இடமணித்தென்றல் ஈறாகிய ஆறுவிரிகளையுடையன;

அவை வருமாறு:

அணிந்துழி நாணீயது உணர்ந்து தெளிவித்தல்.

பெருநயப் புரைத்தல்.

தெய்வத்திறம் பேசல்.

பிரியே னென்றல்

பிரிந்து வருகென்றல்.

இடமணித் தென்றல்.

இவற்றுள் முன்னைய மூன்றும் ஐயந் தீத்தற்கும், பின்னைய மூன்றும் பிரிவறிவுறுத்தற்கும் உரியன.

3 - வன்புறை முற்றிற்று.

நான்காவது – தெளிவு.

ஐந்தாவது – பிரிவுழி மகிழ்ச்சி.

அஃதாவது – பிரிந்து போகுமிடத்துப் போகின்ற தலைவி தன்மையைக் கண்டு தலைவன் மகிழ்தல்;

இது – வகையினறிச் செல்லுங் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லலும், பாகனொடு சொல்லலும் ஆகிய இரண்டு விரிகளை யுடையது; அவை வருமாறு:-

செல்லுங் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்.

பாகனொடு சொல்லல்.

5-பிரிவுழி மகிழ்ச்சி முற்றிற்று.

ஆறாவது - பிரிவுழிக் கலங்கல்.

அஃதாவது - தலைவி பிரிந்த இடத்துத் தலைவன் வருந்துவது.

அது - மருளுற்றுரைத்தல் தெருளுற்றுரைத்தலென இரண்டுவகைப்படும்.

அவை: ஆயவெள்ளம் வழிபடக்கண்டிது மாயாமோவென்றல் முதல் கண்படை பெறாது கங்குனோதல் ஈறாகிய ஐந்து விரிகளை யுடையன;

அவை வருமாறு:

ஆயவெள்ளம் வழிபடக்கண்டிது மாயமோவென்றல்.

வாயில் பெற்றுய்தல்.

பண்பு பாராட்டல்.

(இ-ள்) தலைவியின தழகைத் தலைவன் வியந்துகொண்டாடுதல். பண்பு - ஈண்டு அழகின்மேனின்றது.

கட்டளைக் கலித்துறை

பொன்னே யழற்படு முத்தே துளையுண்ணும் பூப்புலரு
மின்னே கரக்கும்பைந் தேனே யழிதரும் வெள்விடையோன்
றன்னேயந் தன்னை மறவாக் குலோத்துங்கன் றஞ்சைவெற்பி
லென்னேயிப் பூங்கொடிக் கொப்பாக நாமெடுத் தேத்துவதே! 34

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (15-Mar-24, 6:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே