பாவினம் மூன்று கருத்து ஒன்று

பாவினம் மூன்று கருத்து ஒன்று
*********
1. ( நேரிசை வெண்பா )
நாயினை வைப்பராம் நன்றாக வீடுகளே,நல்
தாயினைத் தூற்றுவர் தாங்காது-- தூயவர்,
நேயமிகுந் தோரென நின்றிடும் நீசரை
பேயினம் என்றுநீ கூறு !
( தாங்காது = போற்றிப் பராமரிக்காது)

2. (கட்டளைக் கலித்துறை)

நேயமி குந்தோராய்ப் பூமியில் சேர்ந்திட்ட நீசரினம் ;
நாயினை வைப்பராம் சோடித்து வீட்டின் நடுவறையில்!
பேயின மாய்த்தி கழுமிவ் வரக்கப் பிறப்பினங்கள் ;
நாயினை ஓரங் கடத்தி மகிழ்வர் தரங்கெடவே !

3. (குறள் வெண்பா)

தாய்தனைத் தூற்றும் தரங்கெட்ட வாரிசோ
நாய்தனை வைப்பராமில் லத்து !

எழுதியவர் : சக்கரைவாசன் (16-Mar-24, 8:36 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 35

மேலே