சின்னம் - சினம்
தேர்தல் அரசியலில்
தேவையற்ற
விஷயங்கள்
தான்
தெருவில்
நடக்குது..... நடக்கவேண்டிய
விஷயங்கள்
மூடிய
அறைக்குள்
முடங்கிக்
கிடக்குது......!!
ஒரு கட்சியின்
சின்னம்
பறிக்கப்படவில்லை
மாறாக
அபகரித்து
அண்டை
மாநில
திருடர்களுக்கு
நம்
நிலத்தை
அபகரிக்க..... அழிக்க
அளிக்கப்பட
அன்பளிப்பு......!!
வளர்த்தவன்
எவனோ.....அதை
அதை
கறியாக்கி
விருந்துவைத்து
விருந்தோம்புவது
யாரோ என்பதுபோல
இங்கே
நடந்த
அநீதி......பகல்
திருட்டு ......!!
ஜனநாய நாட்டில்
பண
பினாமிகளின்
சுனாமியில்
சிக்குண்ட
சாதாரண
ஒரு...... மனிதனாக
சக
தோழர்களோடு
நீதிக்காக
நெடுந்தூரம்
சென்று.....தீர்வுக்காய்
தீவிரமாய்
உழைக்கும்
தோழர்கள்
எல்லோருக்கும்
கரும்பின்
சுவை
போல..... இனிப்பான
செய்தி
வந்துவிட
வாழ்த்துக்கள்.....!!
எவர்
எந்த
கட்சி என்றாலும்
இருந்துவிடுங்கள்......
எங்கேயும்
ஜனநாய
மனித
மாண்பு
மேலோங்கி
இருக்கும்வண்ணம்
எண்ணம்
கொள்ளுங்கள் .....!!
கொள்கை
கூட
கொள்ளை
அடிப்பதில்
நோக்காக
கொண்டு
வாழ்ந்தால்
தொண்டுசெய்யும்
எண்ணம்
எப்படி
வெளிப்படும்
உங்களிடம்?????
நோட்டுக்கும்
சீட்டுக்கு
காதல்.......ஆதலால்
சமூக
சீரழிவு
அரசியலில்.......!?!?
வீட்டுக்கும்
நாட்டுக்கும்
மோதல்...... ஆதலால்
சமுக
பேரழிவு........!?!?!
இங்கே
சிந்திச்சு
வாக்களிக்க
சிலபேர்
உண்டு
என்றாலும்
கைகளில்
திணிக்கப்படும்
பணம் பொருள்..... அவனது
சமகால
தேவையின்
நிமித்தம்..... எதிர்கால
சிந்தனை
சிதறடிக்க
தூண்டப்பட்டு
அவனது
வாக்கு
விலைக்கு
வாங்கப்படடது......!
அநீதி
நிதியால்
நிர்மூலமாக்கப்பட்டது.....!!