எப்பொருளிலும் மெய்ப்பொருள் காண்க

' ஜாதிகள் இல்லையடி பாப்பா ' என்று
இவர்கள் கூறுவதெல்லாம் வெறும் மேடையோடு போச்சு

இவர்கள் வீட்டிலோ இவர்கள் 'எங்க வீட்டு நாய் ஜாதி நாய்' என்பார்
'மண்ணிலே பிறந்தவர் எல்லாம் சமமே' என்பார் மேடையில்
இவர்கள் வீட்டிலோ வேலையாட்களுக்கு வீட்டின் பின்னே
புழக்கடையில் தரையில் 'அலுமினிய தட்டில்' தான் சோறு
'நாங்கள் தமிழிலைக் காக்கும் மரபு என்பார்' மேடையில்
இவர்கள் வீட்டு பிள்ளைகளோ ஒருவர்கூட
'தமிழ்ப் பள்ளியில் ' படிக்கவில்லை !
'வேதம் பொய்; சாத்திரங்கள் பொய் ; ஜோதிடம் பொய் ;
என்றெல்லாம் பறை சாற்றுவார் ; இவர்கள்
தலை மறைவாய் யாரும் காணா இடத்தில தமக்காக
நடத்துவதோ 'வேள்விகள்' காய் விரல்களில் அணிவதெல்லாம்
வித விதமான 'நவரத்தினைக் கற்கள்'...ராசி கற்கள்!
'ஜோதிடம் பிற்போக்கான' கருத்து என்று கூறுவது யார் ?

ஆகா அதனால் நான் கூறுவது
மக்களே வெறும் மேடைப் பேச்சில்
மயங்கி போகாதீர்.....உண்மையை
நீங்களே அலசிப் பாருங்கள் .....
எளிய மனம் கொண்ட 'நல்லோரை, சான்றோரை'
அறிந்து கொள்ளுங்கள், அவர் வழியே செல்லுங்கள்
'வாழ்க்கையில் உயர்வைக் காணுங்கள்'
'எப்பொருளிலும் மெய்ப் பொருள் காண்பதே அறிவு'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (29-Mar-24, 2:54 pm)
பார்வை : 8

மேலே