ஏக்கம் தந்தவளே

ஏக்கம் தந்தவளே
-------------------------------

காதலின் தாக்கம்
காதலியின் ஏக்கம் /
நவின நுட்பத்தின்
செதுக்கா சிற்பமே /

உன்னைக் கண்டேன்
உருகா யென்நெஞ்சம்/
கல் விழுந்த
குளமாகக் கலங்கியே /

நிலையாக முகம்கான
நிழலாகப் பின்தொடர்ந்தும்/
மேகத்தில் அகப்பட்டு
மறையும் கதிரவனாக /

மனக் கட்டுப்பாட்டில்
மனதைப் பூட்டியவளே /
மலரும் மொட்டாக
மனம்திறப் பெண்ணே/

ஏடுகள் நிறைந்தது
ஏக்கக் கவிதையில்/
விடியல் பலகண்டும்
விடையில்லை உன்னிடம் /

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (2-Apr-24, 4:22 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : aekkam thanthavalae
பார்வை : 70

மேலே