மீண்டும் வந்தால் வரட்டும் நமக்கென்னடா

வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது (கண்ணதாசன்)
பிழைக்கவும் தெரியும் ஏய்க்கவும் தெரியும், நாணயம் என்ன தெரியாது (நான்)
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணின் நமக்கே இடமேது (கண்ணதாசன்)
இருப்பவரெல்லாம் இறந்துவிட்டால் இந்த மண்ணில் தங்க இடம் எதற்கு?(நான்)

வாழ்க்கை என்பது வியாபாரம்(கண்ணதாசன்)
வழுக்கை குறைக்கும் தலைபாரம்(நான்)

வரும் ஜனனம் என்பது வரவாகும் (கண்ணதாசன்)
அனாவசியமா பெருகுவது உறவாகும்(நான்)

அதில் மரணம் என்பது செலவாகும்(கண்ணதாசன்)
இறந்தபின்னும் பணம் செலவாகும்(நான்)

போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?(கண்ணதாசன்)

மீண்டும் வந்தால் வரட்டும் நமக்கென்னடா
இந்த கேடுகெட்ட பூமியில் எதற்கு நாம் வாழணும்டா?(நான்)

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (2-Apr-24, 5:03 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 40

சிறந்த நகைச்சுவைகள்

மேலே