விஞ்ஞானமும் என் ஞானமும்
எந்த ஒரு செயலுக்கும் அதற்கேற்ற ஒரு எதிர் வினை விளைவு ஏற்படும். அப்படி என்றால் நாம் செய்யும் ஒவ்வொரு எதிர்வினை விளைவிக்கும் ஒரு செயல் ஏற்படுமா?
தண்ணீர் எப்போதும் மேட்டிலிருந்து பள்ளம் நோக்கித்தான் பாயும். அப்படியெனில் பள்ளத்தில் இருக்கும் தண்ணீர் மேட்டிற்கு செல்ல பெரிய ஒரு ஏணியை உபயோகப்படுத்தலாம்.
கடலில் தண்ணீர் கொந்தளித்து அலை அலைகளாக வந்து கரையில் மோதுவது ஒருபோதும் நிற்காது. அப்படியெனில் கரையில் வந்து சேரும் கடல் தண்ணீரை நாம் அருந்தினால் நம் மனக்கொந்தளிப்பு நின்றுவிடுமா?
சுடும் நெருப்பில் கை வைத்தால் கை சுடும். சுடும் கையில் நெருப்பை வைத்தால் நெருப்பு சுடுமா?
அளவுக்கு மீறினால் அமிருதமும் விஷம். அப்படி என்றால் அளவுக்கு மீறாத அமிருதம் விஷமம் தானே?
காலையில் சூரியன் உதித்தால் மாலையில் சந்திரன் உதிக்கிறான். ஒரு வேளை சந்திரன் காலையில் உதித்தால், சூரியன் மாலையில் உதிப்பானா அல்லது சந்திரனை உதைப்பானா?
சனி கிரகம் சூரியனை சுற்றிவர 29.4 வருடங்கள் ஆகிறது. அப்படி என்றால் ஏழரை நாள் சனி உள்ளவர்கள் சனியை சுற்றிவர எவ்வளவு வருடங்கள் ஆகும்?
தண்ணீரும் எண்ணெயும் எப்போதுமே ஒன்று சேர்வதில்லை. அப்படி இரண்டையும் சேர்க்கவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்? பாஜகவையும் காங்கிரசையும் ஒன்று சேர்க்கவேண்டும்.
பெண்தான் குழந்தையை சுமந்து பெறுகின்றாள். அப்படி என்றால் ஆண் என்ன செய்கிறான்? குழந்தையை சுமக்கும் பெண்ணை சுமக்கின்றான்.
ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டால் அது கல்யாணம். அப்படி திருமணம் செய்யாமல் இருந்தால் அது கலாட்டா கல்யாணம்.
ஐசக் நியூட்டன், தாமஸ் ஆல்வா எடிசன், ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின், அல்பிரேட் நோபல், மைக்கேல் பாரடே, அலெக்சாண்டர் கிரஹாம் பெல், மெரி கியூரி, நிகோலா டெஸ்லா, கலீலியோ, சார்லஸ் டார்வின், லூயிஸ் பாஸ்டர், பித்தகோரஸ், ஆர்ச்சிமிடிஸ் போன்ற புகழ் வாய்ந்த விஞ்ஞானிகள் இவ்வுலகில் பிறக்காதிருந்தால் இப்போது உலகம் எப்படி இருக்கும்? செல்போன் இம்சைகள் இருந்திருக்காது. தொலைக்காட்சியின் தொல்லைகள் இருந்திருக்காது. சினிமா பைத்தியம் இருந்திருக்காது. கார் பைக் இல்லாததால் நாம் சுறுசுறுப்பாக இருந்திருப்போம். இருபதாம் மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்ளாமல் இருந்திருப்போம். வாட்சப்பின் நித்திய கொடியசெய்தி பரிமாற்றங்களிலிருந்து தப்பித்திருப்போம். Face புக்கில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படாமல், பிட் படங்களின் மோகத்தில் சிக்கிக்கொள்ளாமல் நிம்மதியாக மிகவும் நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்துகொண்டிருப்போம்.
வாழ்க வளமுடன்