அழகு நிலையம்

ஏறும் வயது
எட்டிப் பார்க்க வைக்கிறது
*
அழகு நிலைய வாசல்
உள்ளிருந்து வெளியேறுகிறது
கொக்காகிய காகம்
*
அவலட்சணங்களின் தயவால்
இலாபகரமாக இயங்குகின்றன
அழகு நிலையங்கள்
*
சொலிக்கும் அழகுப் பதுமை
பணம் செலுத்தித் தொலைத்து வருகிறாள்
அழகு நிலையத்தில் முதுமை
*
முக்காலம் காகம் முங்கிக் குளிக்காமல்
இக்காலம் நகரின்
அழகு நிலையத்தில்
*
கண்ணால் காண்பது பொய்
காதால் கேட்பதும் பொய்
அழகு நிலைய வாசலில்
நின்றால் புரியும் மெய்
*
தன் முகத்தையே பார்க்கச் சகிக்காமல் அதிர்ந்தாள் குளித்தப்பின் கண்ணாடியில்
முகம் பார்த்த நடிகை
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (2-Apr-24, 7:47 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : alagu nilayam
பார்வை : 56

மேலே