அரங்கன் கண்ணழகில் மதிமயங்கிய நான்
ஒருமுறைப் பார்த்தேன் அதுவே முதல்முறை
இருமுறைப் பார்க்கவைத்தாய் இதோனான் உன்முன்
பலமுறைப் பார்க்கவைத்தாய் பார்த்தும் மோகம்
தெளியவில்லை உன்னைவிட்டு அகல மனமில்லை
என்னதான் அழகோ உந்தன் கண்ணழகு
இதற்கிணையும் உண்டோ ஈரேழு உலகில்
ஆயர்குல ஏறே ஆதி கேசவனே
இனி உன்னடிவிட்ட கலேன் எனக்கதி நீயே