கண்கள் தொடுக்கும் காதல் பாகம் - 8
கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 8
வானம் அழகுதான், அதை விட வானம் மழை பொழியும் வேளையில் மிக அழகாக இருக்கும், அது போல் தான் நடந்த சம்பவத்தை நினைத்து அழுதுகொண்டே இருந்த திரிஷாவின் அழகு புன்னகையின் அழகை காட்டிலும் அழுதபோது அவள் அழகு தூக்கலாக இருக்கவே , கெளதம் அவளை சிறிது நேரம் அழ வைத்து ரசித்தான்..சிரிது நேரத்தில் திரிஷாவிடம் சென்று..
திரிஷா அழாதே ,கண்ணீரைத் துடை , திரிஷா நீ செய்தது சரிதான், இப்படித்தான் துணிச்சலாக இருக்கனும் ,தவறு செய்தது யாராக இருந்தாலும் தட்டியும் கேட்கலாம் , நான்கு தட்டும் தட்டலாம் என்றான் கெளதம்..
கண்ணீரைத் துடைத்து நிமிர்ந்து கெளதமை பார்த்தாள்.. கெளதம் அவளை நோக்க பாரதி காணத் துடித்த புதுமை பெண்ணாக அவனுக்கு அவள் தெரிந்தாள்..
வழக்கத்திற்கு மாறாக அதிகமான பயணிகள் கூட்டம் பேருந்தில் இருந்ததால்.. திரிஷாவுக்கு இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டிருந்த..அவளை நோக்கி "திரிஷா இங்கே வா இருக்கை இருக்கு என்று அழைத்தான்" அந்த இடம் நோக்கி சென்று அமர்ந்தவள் .
ஒரு பார்வை அவனை பார்க்க..அவன் அதை கவனித்தவன் என்ன ? திரிஷா என்று கேட்டவுடன் தலையை மட்டும் ஆட்டிவிட்டு குனிந்தாள்.அப்பா அம்மா உறவுகள் என யாரும் இவ்வளவு அக்கறை காட்டி என்னிடம் நடந்ததில்லை.. என்று நினைத்தவள் அவனை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை வர மீண்டும் தலையை நிமிர்த்தி கெளதமை பார்த்த அந்த நேரத்தில் பேருந்தில் ஒலித்த சூரியன் பண்பலை 93.5 யில் " ஒரு முறை பிறந்தேன்
ஒரு முறை பிறந்தேன்
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்
மனதினில் உன்னை சுமப்பதினாலே
மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்
என் கண்ணில் உனை வைத்தே
காட்சிகளை பார்ப்பேன்...
ஒரு நிமிடம் உனை மறக்க
முயன்றதிலே தோற்றேன்...
நீயே என் இதயமடி நீயே என் ஜீவனடி
என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்க இருவர் கண்களும் ஒருவர் ஒருவரை பார்த்து கொண்டே இருந்தது..
"உன் கண்ணிலே துளி நீரையும்
நீ சிந்தவும் விடமாட்டேன்
உன் நிழலையும் தரை மீதிலே
நடமாடவும் விடமாட்டேன்..."
என்ற வரிகள் ஒலித்தவுடன் கெளதம் அவளை பார்த்து மெல்ல சிரித்தான், திரிஷாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிகள் எட்டி பார்க்க, கெளதமை நோக்கி"நன்றி கெளதம் என்றாள்"
அதற்கு அவன் சிரித்து விட்டு,திரிஷா இன்று நடந்த எதையும் வீட்டில் சொல்லாதே.. என்றான்..
இல்லை கெளதம் சொல்வேன் என்றாள்.திரிஷா வீட்டில் சொன்னால் உன்னை கல்லூரிக்கு விட மாட்டார்கள் என்று கெளதம் சொன்னான்.. அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு உடன்படுவேன் கெளதம் என்று திரிஷா சொல்லி விட்டு அமைதியானாள்..
வடை போச்சே ! என்ற நிலையானது கெளதமின் காதல்...
...... தொடரும்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்