கண்கள் தொடுக்கும் காதல் பாகம் - 9

கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 9

கதிரவன் விழிக்க வெயில் பூமியுடன் கை கோர்த்து விளையாட ஆரம்பித்த காலை வேளையில் கெளதம் பேருந்து நிலையத்தில் திரிஷா வருவாளா என்ற கவலையுடன் பம்பரமாக பேருந்து நிலையத்தை சுற்றி வந்து திரிஷாவின் வருகையை  எதிர் பார்த்து காத்திருக்க..

வெள்ளை யானை உருவில் Mahindra Scorpio car ஒன்று பேருந்து நிலையத்தில் வந்து நிற்க குங்குமக் கலர் சேலை கட்டி.மாம்பழக் கழுத்தில் தங்க நகை சில அணிந்து, எலுமிச்சை உதட்டில் சாயம் தீட்டி ,வெள்ளி நீர்வீழ்ச்சிக்கு கருமை சாயம் பூசியதாக கூந்தல் காற்றிலாட மகாலட்சுமியாக இறங்கினாள் திரிஷா..

ஓட்டுநர் சீட்டில் இருந்த நல்ல வளர்த்தியுடன் பெரிய மீசையுடன் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து வந்திருந்த நபர் திரிஷா வின்‌ காதில் முனு முனுக்க .. திரிஷாவோ கெளதமை அவரிடம் கை காட்ட
வேட்டியை தூக்கி கட்டி கெளதமை நோக்கி வர..

கெளதம் உடலில் வியர்வையும் சிறுநீரும் கசிய ஆரம்பித்தது.. வந்தவர் கெளதம் முன் இரு கைகளை கூப்பி "நன்றி நம்பி" என்று பேசத் துவங்கியவர் எதோ எதோ வினாவை கெளதம் முன் வைக்க அவனோ இதோ இதோ பதில் என்று முன் வைக்க..பேசி விட்டு இரு கைகளையும் பிடித்து குலுக்கி வரேன் தம்பி என்று சொல்லி கிளம்பினார்..

கெளதம்  திரிஷாவை இதுவரை அவளை இப்படி  பார்த்ததில்லை அவளை இப்போதே அள்ளிக் கொண்டு போய் தாலி கட்டிட யோசித்த வேளையில் திரிஷா அவனருகே வந்திருந்தவள் ..

" Thanks கெளதம்" இன்று முதல் நாம் "நல்ல தோழன் தோழியாக பழகுவோம் கெளதம் "என்றவுடன் கெளதமுக்கு அவனை கடலில் தூக்கி கடாசுவதாக உணர்ந்தவனுக்கு பேராசிரியர் சொன்னது ஞாபகத்துக்கு வரவே அவனும் சரியென்று தலையாட்டினான்.. இப்போது அவனுக்கு அவள் அழகாக தெரியவில்லை..

மதிய சாப்பாட்டு வேளையில் திரிஷா கெளதமை தேடினாள், கெளதம் தனிமையில் சாப்பிட்டு கொண்டு இருந்தவனை பார்த்தவள், மெல்ல அவனருகே சென்றவள் "பழைய சோறும் நான்கே நான்கு துண்டு சேவும், ஊறுகாய் பட்டை "ஒன்றை வைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தான்" கெளதம் என்று திரிஷா அழைக்க பதறியவன் டிபனை மூடினான்..

திரிஷா கெளதம் கையைப் பற்றி இந்த இதை சாப்பிடு என்று தனது டிபன் பாக்ஸை கொடுத்தாள்..

அவன் வாங்க மறுத்து" இன்று ருசியான சாப்பாடு சாப்பிட்ட வாய் நாளையும் கேட்டால்"எங்கே செல்வேன் என்றான்..

இன்று மட்டும் அல்ல நாளை முதல் உனக்கு தனியாக சாப்பாடு கொண்டு வாரேன் சாப்பிடு கெளதம் என்று சாப்பாட்டை நீட்டினாள்..

" இன்று கொடுப்ப நாளையும் கொடுப்ப கல்லூரி காலம் வரை கொடுப்ப " இதே நிலை எனக்கு நீடித்தால் கல்லூரி காலத்திற்கு பின்..என்றவனை கையை இருக பற்றிக் கொண்டு திரிஷா..

"இன்றும் இல்லை நாளையும் இல்லை கல்லூரி முடியும் வரை இல்லை.. என் உயிர் இருக்கும் வரை உனக்கு நான் சாப்பாடு தருவேன் கெளதம்" என்றாள்

இருவரும் திரிஷா கொண்டு வந்த சாப்பாட்டை பகிர்ந்து சாப்பிட்டனர்..இப்படியோர் சாப்பாட்டை அவன் இதுவரை சாப்பிட்டதில்லை ..

டிபன் திறந்து சாப்பாடு கொடுத்தவள் உள்ளம்  திறந்து காதலை சொல்வாளா?...

...தொடரும்

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (4-Apr-24, 5:58 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 26

மேலே