கண்கள் தொடுக்கும் காதல் பாகம் - 10

கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 10

கெளதம்.. அப்பா உன்னை ஞாயிற்றுக்கிழமை எங்க வீட்டுக்கு வரச் சொன்னாங்க என்று திரிஷா கெளதமிடம் சொல்ல, அதற்கு அவன் ஏதும் விசேஷமா? என்று கேட்டான்..

ஆமாம் கெளதம் என் தங்கை(அவளை விட ஐந்து வயதுக்கு இளையவள்)பூப்பெய்து விட்டதால் அன்றைக்கு function வச்சிருக்காங்க அதுதான்.. அதற்கு அவன்  இது முழுக்க முழுக்க ladiesதான் கலந்துக்குவாங்க  நான் எப்படி என்று இழுத்தான்.  பரவாயில்லை ஆண்களும் வரலாம் வா.. என்று அன்பாக கட்டளையிட்டால் திரிஷா..

ஞாயிற்றுக்கிழமை காலையில் பேருந்து நிலையத்தில் பேருந்தை விட்டு இறங்கியதும்.. திரிஷாவின் வீட்டுக்கு செல்ல திரிஷா வின் அப்பா கமல் அவள் அம்மா அபிராமி பெயரில் நடத்தும் அபிராமி டிராவல்ஸ் என்ற பெயரில் இயங்கும் டவேரா காரை அனுப்பியிருந்தார்.. அவன் வருவதற்கு முன்பே கார் நின்று கொண்டிருந்தது அதில் ஏறினான்..கார் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள பிரபல திருமண மண்டபத்திற்கு பின் உள்ள வீட்டின் கேட்டைத் தாண்டி உள்ளே சென்றது..

அந்த வீடு சுமார் 1 கோடி மதிப்புள்ள மிகப் பெரிய வீடாக இருந்தது.. அவன் திரிஷாவின் வீடு சிறிதாக இருக்கும் என்றே நினைத்தான் அவள் அப்பா ex-army அதனால் சில ஆயிரம் ஓய்வூதியமும் , டிராவல்ஸ் ஒரு சின்ன வருமானமும் கிடைக்கும் என்று கீழ்த்தரமாக சிந்தித்தவனுக்கு வீட்டைக் கண்டதும் மிரண்டு போயிருந்தான்..

வீட்டுக் கேட்டை தாண்டி உள்ளே வீட்டின் முன் சென்றதும் ஓட்டுநர் ஒரு horn அடித்ததும், வீட்டின் முன் லட்சுமி, சரஸ்வதி படம் பொறித்த மரக் கதவுகள் திறந்ததும் திரிஷா வந்தாள் வா கெளதம் என்று வீட்டுக்குள் அழைத்து சென்றாள்.. வீட்டின் அழகிய கலைநயம் மிக்க வெள்ளை நிற உயர்ந்த விலை டைல்ஸ் பதித்த முன் வரவேற்பு அறையில் மிகப்பிரபலமான கம்பெனி சொகுசு இருக்கையில் அவனை அமர வைத்து அவன் வந்ததை கமலிடம் தெரிவிக்க திரிஷா  வீட்டினுள் சென்றாள்.

திரிஷா பெற்றோர் தேநீர் கோப்பையுடன் உடன் வந்தவர்கள் "வாங்க தம்பி" என்றவர்கள் தேநீர் கோப்பையை அவனிடம் கொடுக்க சில வார்த்தை பேசியவர்கள், திரிஷா... என்று மகளை அழைத்தார்கள் அவளும் வர திரிஷா. தம்பிக்கு ஒரு ரூம் கூடுமா என்று சொல்லிவிட்டு அவர்கள் வேலையை பார்க்க சென்றனர்..

வா கெளதம் என்று அழைத்தவள்  ஒரு‌ A/C அறையை திறந்து உள்ளே அழைத்து சென்றாள், அறையில் கட்டில் TV யென்று 5 ⭐ star room போல் இருந்தது, மூங்கில் சேர் ஒன்றில் அவனை உட்கார சொன்னாள்.. அவன் உட்காராமல் மெய் மறந்து நின்றான்.
அவனது கையைப் பிடித்து , முதன் முதலாக அவளின் கை அவனைத் தொட்டவுடன் 1500 KW மின்சாரம் பாய்ந்தது போல் சிலிர்த்தது .சேரில் உட்கார வைத்தாள்..இரு சாப்பாடு கொண்டு வாரேன் என்று சொல்லி  உள்ளே சென்றாள்.. திரிஷா.

கெளதமின் வீடு ஓடு வேயப்பட்ட கூரை வீடு .. வீட்டுக்கு விளக்கு தேவையிருக்காது காலையில் சூரியனும் இரவில் சந்திரனும் திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்து ஒளி தருவார்கள்..மழை பெய்தால் நமது அரசு பேருந்து நிலைதான் கூரையின் ஓட்டை வழியாக விழும் மழைநீரை தடுக்க குடை பிடிக்க வேண்டும் .. இப்படிப்பட்ட வீட்டில் இருந்தவனுக்கு.. திரிஷாவின் வீடு ஒரு சொர்க்கமாக தெரிந்தது..

திரிஷாவை காதலியாக்கி இந்த வீட்டை தன்வசம் கொண்டு வர வேண்டும் என்ற முவுக்கு வந்தவன்.. கெளதம் அமைதிப்படை அமாவாசையாக மாறியிருந்தான்..

.... தொடரும்

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (5-Apr-24, 5:45 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 31

மேலே