கண்கள் தொடுக்கும் காதல் பாகம் 7
கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் 7
வழக்கமாக கல்லூரி செல்ல பேருந்து நிலையத்தில் திரிஷா பேருந்துக்காக காத்திருந்த போது, சிங்கார வேலன் படத்தில் வரும் வடிவேலுவைப் போலவே அரைகுறை ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு, காதில் கடுக்கன், கருப்பு நிற கால்சட்டை, வெள்ளை நிற மேல் சட்டை, பெல்ட் மற்றும் சாக்ஸ் சூயென ஆய்வகத்தில் உள்ள எலும்புக் கூடுக்கு மாட்டி விட்டது போல் இருந்தவன், திரிஷாவை பார்த்து hellow hai,how are you? என்று சொல்லி அவளை நோக்கி வந்தான்..அவனை பார்த்து அவள் யார் இந்த ஓணான் என்பதை போல் விழி பிதுங்கி மிரண்டு பார்த்தாள் .
எலும்புக் கூடு பையிலிருந்து நான்காக மடித்து வைத்திருந்த வெள்ளை காகிதத்தை எடுத்து திரிஷாவிடம் நீட்டி take it,l love youடா செல்லம் என்று அவளை நெருங்கினான்,அவள் விலகி பின்னோக்கி சென்றாள்,அவனோ விடாமல் முன்னேறி சென்றான்.. கோபத்தின் உச்சிக்கு போனவள் சில நொடிகளில் காலில் இருந்த செருப்பை கழட்டி எலும்புக் கூடுயின் வலது கன்னத்தில் ஒரு அடி சப்புன்னு கொடுத்தாள்.. அவனது கன்னத்தில் செருப்பின் ஜெராக்ஸ் காப்பி எடுத்தது போல் பதிய பேருந்து நிலையமே அதிர்ந்தது..
அடித்த மறு நிமிடம் அங்கிருந்த பெண்கள் அவளை சுற்றி நின்று, ஏன்டி அவனை பிடிக்கவில்லை என்றால், உன்னை பிடிக்கவில்லை போடனு சொல்ல வேண்டியதுதான, ஒரு ஆணை இப்படிய அடிப்பது என்றாள் ஒருத்தி, நீயெல்லாம் ஒரு பெண்ணா திமிர் பிடித்த கழுதை என்றாள் இன்னொருத்தி இப்படியாக " பெண்களே பெண்மையை அடிமைப் படுத்தி கொண்டிருக்க" அவளின் கண்களில் சுனை நீர் போல் ஊற்று எடுக்க அழுதுகொண்டு இருந்தாள்.
இதைக்கண்ட கெளதம் விரைந்து சென்று திரிஷாவின் முன் நின்றான்..அவளை சுற்றி நின்ற பெண்களைப் பார்த்து, முதலில் தவறு செய்தவன் அவன்,அவனை ஏதும் சொல்லாமல்,தட்டிக் கேட்ட இந்த பெண்ணை வசை பாடுவது சரியா ? என்று கத்தியவன் ,
எலும்புக் கூட்டின் சட்டயைப் பிடித்து இழுத்து,"ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் பெண்ணுக்கு கடிதம் கொடுப்பதோ ,சீண்டுவதோ தவறு" அவளிடம் மன்னிப்பு கேள் என்று, அவள் முன் அவனை தள்ள , அவன் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டான் .
கெளதம் திரிஷாவை பார்த்து, ஒரு ஆணோ,பெண்ணோ சிறு தவறு செய்தால் முதலில் பேசி தீர்க்க வேண்டும்,அதை விட்டு கையை நீட்டுவது தவறு நீ அவனிடம் மன்னிப்பு கேள் என்றான்.. அவளும் எலும்புக் கூட்டிடம் மன்னிப்பு கேட்டாள்..
திரிஷாவை சுற்றி நின்ற பெண்களை ஏற இறங்க கெளதம் பார்த்து விட்டு, அவர்களிடம் "ஒரு பெண் தன்னை தற்காத்துக் கொள்ள தவறு செய்த ஆண்களை அடித்தால் " என்ன தவறு? " பெண்களே பெண்களை அடிமைப் படுத்துவதை நிறுத்துங்கள் " என்று மிரட்டல் விட பெண்கள் கலைந்து சென்றனர்..
திரிஷா கெளதமுக்கு "பூமி பெரியது என்று பூமி உருண்டையை பரிசாகக் கொடுத்திருந்தாள்",இன்று அவன் "பூமி பெரியது தான் அதில் நமக்கு உரியது குறுகிய வட்டம் " என்பதை நிருபித்தான்.. அந்த வட்டமும் அவனுக்கு நான்தான் என்பதை திரிஷா உணர்ந்தாள் ..
.. தொடரும்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்