காண்டு
பையன் பேரு என்னங்க?
பையன் பேரு 'காண்டு'.
சென்னை 'காண்டா'?
இல்லங்க. வட மாநிலங்களில் சிலர்
அவுங்க பேரோட இணைத்துக் கொள்ளும்
'காண்டு'.
காண்டுக்குப் பொருள் தெரியுமுங்களா?
பொருள் என்னங்க பொருள். தமிழ்ப் பேரை
நம்ம பிள்ளைகளுக்கு வைக்கக் கூடாது.
இது தானே அறிவியல் கால தமிழரின்
நாகரிகம்.
இன்னோரு பையன் பிறந்தா?
அவனுக்கு 'தாண்டு'னு வைப்பமுங்க.
எங்கள் பிறப்புரிமை இது.
சரிங்க. காண்டு. தாண்டு. நல்லவேளை
'மாண்டு' இல்லங்க.
அதுக்கென்னங்க. மூன்றாவதும் ஆண்
குழந்தையாப் பிறந்தா அதுக்க
'மாண்டு'னே பெயர் சூட்டுவோம். எல்லாம்
இந்திப் பேருங்கனு சொல்லிட்டாப் போதும்.
நம்ம தமிழ் மக்கள் "'காண்டு, தாண்டு,
மாண்டு' எல்லாம் சுவீட்டான பேருங்க"னு
சொல்லிப் பாராட்டுவாங்க.