பேமா இங்க வாம்மா

ஒரு குடும்பத்தில் முதல் மகப்பேறில் பெண்

குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் உரையாடல்:

கணவன்: கண்மணி நாம் வேண்டிட்டு

எதிர்பார்த்த மாதிரியே பெண் குழந்தை

பிறந்திருக்குது.

@@@@@

ஆமாங்க. எனக்கும் ரொம்ப சநதோசமுங்க.

நாம் ஏற்கனவே முடிவு பண்ணின‌

பேரையே வச்சிருலாங்க.
@@@@@@

ஆமாம் கண்மணி நீ சொல்லறது சரிதான்.

பிரேமா எனக்கும் ரொம்ப பிடிச்ச பேருதான்.

@@@@@@

அடுத்த நாள் சோதிடரிம் கண்மணியின்

கணவர் குழந்தை பிறந்த நாள், நேரம்

பற்றிய தகவல்களைக் கூறுகிறார்.


@@@@@

சோதிடர்: தம்பி பொன்னையா குழந்தை

பிறந்த நேரமும் ராசியும் சரியில்லை.

எனக்கு எண்கணித ஜோதிடமும் தெரியும்.

எனவே குழந்தைக்கு நீங்க வைக்கிற

பேருலதான் குழந்தையோட

தலையெழுத்தையே மாற்றி விடலாம்

என்ன சொல்லற தம்பி?

@@@@@@

சரிங்க சோதிடர் ஐயா.
@@@@@

நீங்க ஏதாவது பேரைக் தேர்ந்தெடுத்து

வச்சிருக்கிறீங்களா?
@@@@@

ஆமாங்க ஐயா. 'பிரேமா' (Prema)ங்கிற பேரு

எனக்கும் என் மனைவிக்கும்

ரொம்ப பிடிச்ச பேருங்க ஐயா.
@@@@@

பிரேமா. ஆங்கிலத்தில் Prema. இது

எண்கணித ஜோதிடப்படி

உங்க குழந்தைக்கு ராசி இல்லாத பேரு.

@@@@@
அப்ப நீங்களே ஒரு பேரைச் சொல்லுங்க

சோசியர் ஐயா.

@@@@@
பிரேமா நல்ல பேருதான். ஆனால் எண்

கணித சோதிடம் இந்தப் பேருக்கு ஒத்து

வரலியே. (கொஞ்ச நேரம் யோசித்து)

இந்தப் பேருல ஒரு சின்ன மாற்றம் செய்தா

உன் குழந்தையோட வாழ்க்கை சிறப்பாக

இருக்கும். வளம் யாவும் பெற்று நூறாண்டு

வாழ்வாள.
@@@@

அதை நீங்களே சொல்லுங்க ஐயா.

@@@@@@
உம் சொல்லறேன். P R E M A. இந்த

அஞ்செழுத்துப் பெரை நாலு எழுத்துப்

பேரா மாத்தினாப் போதும். அந்தப் பேரில்

உள்ள இரண்டாவது எழுத்தைத்

தூக்கிடணும். அதை எடுத்துட்டா P R E M A

PEMA ஆகிடும். பேமா அருமையான பேரு.

சரியா பொன்னையா?
@@@@@@

நீங்க சொன்னா சரிதான். பேமா.

அருமையான பேருங்க ஐயா. ரொம்ப

நன்றிங்க ஐயா.

@@@@@@@@@@@@£££££££££££££££££££
வட இந்தியாவில் உள்ள ஒரு பெயர். இந்தப்
பெயருக்கான பொருள் தெரியவில்லை.

எழுதியவர் : மலர் (31-Mar-24, 7:55 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 29

மேலே