கண்கள் தொடுக்கும் காதல் பாகம் -6

கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் -6

பேராசிரியர் சொன்ன அறிவுரைகள் அனைத்தையும் , மண்ணில் விழும் மழைநீரை மண் உறிவது போல், கெளதம் உள்ளம் உள்வாங்கிக் கொண்டன..

அன்றிலிருந்து "இதயத்தையும் உள்ளத்தையும்" திரிஷாவிடம் பறிகொடுத்தவன் ,"கண்களையும் மூளையையும்" படிப்புக்காக அர்ப்பணித் தான்

கண்கள் புத்தகத்தை புரட்டினாலும் , ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு ஒருமுறை திரிஷாவைத் தேடியே கண் சென்று கொண்டிருந்ததை அவனால் தடுக்க முடியவில்லை..

நடந்து முடிந்த பருவத் தேர்வில் வகுப்பின் முதல் மாணவனாக கெளதம் வெற்றி பெற்றான்.இதுவரை படிப்பில் இந்த இடத்தை அவன் தொட்டதில்லை எல்லாம் திரிஷா மீதான மாயையால் கிடைத்தது..

பருவத் தேர்வில் வெற்றி பெற்றதால் பேராசிரியர் அவனுக்கு ஆறுதல் பரிசாக கைக் கடிகாரம் ஒன்றை பரிசளித்தார்.. அன்பான மாணவ மாணவியரே உங்களால் முடிந்த பரிசுகளை கொடுத்து கெளதமை வாழ்த்துங்கள் என்று பேராசிரியர் வேண்டுதல் விடுத்தார்..

பேராசிரியர் சொன்னது போல அனைத்து மாணவர்களும் மறுநாள் பரிசுகளோடு வந்து மாணவர்கள் ஒவ்வொரு வராக பரிசை கொடுத்து வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டே சென்றனர்.. திரிஷா அவன் அருகே வர வர இதயப் படபடப்பு சட்டையைத் தாண்டி துடித்தது..திரிஷா இப்போது அவன்‌ அருகே வந்து விட்டாள் அவனுக்கு வேர்க்க ஆரம்பித்தது..வந்தவள் கிஃப்ட் பாக்ஸ்யை கையில் கொடுத்து வாழ்த்துக்கள் என்று இடியாக முழங்கி மின்னலாக சென்றவளை..

திரிஷா என்று அழைத்தான், அவளும் நிற்க காதலை சொல்ல வந்தவனுக்கு நா தழுதழுக்க " thanks " என்றான், அதற்கு அவள் மல்லிகை அரும்பு விரிவது போல் மிக சிறிதாக உதடுகளை விரித்து ஒரு மெல்லிய புன்னகையை மட்டும் புரிந்து விட்டு,ஜெயம் படக் கதாநாயகியாக " போயா போ " என்று சொல்வது போல் இருந்தது அவளது நடையின் வேகம்..

வீட்டுக்கு சென்ற கெளதம், மாணவர்கள் கொடுத்த பரிசுகளில் திரிஷா கொடுத்ததை தேடி எடுத்து பிரித்தான். உள்ளே அழகிய பூமி உருண்டை இருந்தது..அவன் எதிர் பார்த்தது காதலுக்கான சமிக்ஞை (சிக்கனல்) எதாவது கிடைக்குமா என்றுதான் ஆனால்...

அவளோ " என் பின்னால் சுற்றாதே பூமி‌ பெரியது " என்பதை உணர்த்தவே இதை பரிசளித்தாக உணர்ந்தவன், மெல்ல சிரித்து கொண்டான்..

பேருந்து நிலையத்தில் காத்திருந்த‌போது .....

.... தொடரும்

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (31-Mar-24, 12:49 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 34

மேலே