கண்கள் தொடுக்கும் காதல் பாகம் -5

கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் -5

கெளதம் பேருந்திலிருந்து இறங்கியவுடன் திரிஷாவை பார்க்க திரும்பினான்.. அதே கல்லூரி நிறுத்தத்தில் அவளும் இறங்கினாள்..

கொதிக்கும் எரிமலை மீது விழுந்த மழைத் துளியாக இருந்தது அவனது உள்ளத்திற்கு அவள் வருகை .... கெளதம் வகுப்பறைக்கே அவளும் வந்திட , மகிழ்ச்சியில் அவனது முகம் மின்மினிப் பூச்சியாக ஒளிர்ந்தது..

கெளதம் மிகவும் புத்துணர்வுடன் இருப்பதைக் கண்ட பேராசிரியர் அவனைப் பார்த்து" வேற லெவல் கெளதம்"இப்படித்தான் ஒரு மாற்றம் வேண்டும்.. என்றவர் அவரது காதல் கதையை சொல்ல ஆரம்பித்தார்..

நீரோடை போல் சலசலத்த வகுப்பறை அணை நீராக அமைதியானது.. நானும் காதல் திருமணம் செய்தவன்.ஆனால் அதற்கான ஃபார்முலா ஒன்றை கையாண்டு வெற்றி பெற்றேன்.அந்த ஃபார்முலா
1) கல்வி
2) வேலை
3) காதல் என்பவைதான்

வாழ்க்கையை தொடங்குவதற்கு அடிப்படையில் தேவை கல்வி,
வாழ்க்கை நடத்துவதற்கு தேவை பணம் அதை தருவது வேலை,
வாழ்க்கை வாழ்வதற்கு நல்ல மனைவி தேவை அதை தருவது காதல்..
இந்த மூன்றையும் கடைப்பிடித்தால் காதல் வாழ்க்கையில் இறுதி வரை வெற்றி நிச்சயம்..

நம் மீது முழுமையாக நம்பிக்கை கொண்ட பெண் தோழியாக வேண்டும் ..
நன்றாக நம்முடன் பழகிய தோழி காதலியாக வேண்டும்
நன்றாக நம்மை புரிந்து கொண்ட காதலி மனைவியாக அமைந்தால் மென்மேலும் இல்லறம் நல்லறமாக இனிக்கும்..

என் காதல் மனைவியும் நானும் கல்லூரியில் படிக்கும் போது சிறந்த நண்பர்களாக பழகினோம்,
இருவருக்கும் வேலை கிடைத்த பின் ஒருவருக்கு ஒருவர் காதலித்தோம் ,
இரு வீட்டார் பெற்றோர் சம்மதம் தெரிவிக்க கணவன் மனைவியானோம் .. மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம், திருமணம் ஆகி 24 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம் ..

தாய்க்கு பின்தான் தாரத்தை வைக்க வேண்டும்..தாரத்திற்கு பின் தாயை வைத்து அழகு பார்க்கக் கூடாது..தாய் என்பவள் நம்மை உருவாக்கி வயிற்றில் சுமந்து மீள் பிறப்பெடுத்து பெற்ற தெய்வம் ',தாயை வணங்க வேண்டும் .. நமது வாழ்க்கையை சுமக்கும் தாரத்தை தாயாக மதிக்க வேண்டும்.. என்றார் பேராசிரியர்..

இவற்றையெல்லாம் கேட்ட கெளதம்..

....தொடரும்

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (31-Mar-24, 12:48 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 23

மேலே