வாக்குச் சேகரிக்கச் சென்று வந்த தந்தையிடம்

வாக்குச் சேகரிக்கச் சென்று வந்த தந்தையிடம் அவரது மகன்:

அப்பா, இன்னிக்கு அதிகாலை அஞ்சு மணிக்கே வாக்குச்

சேகரிக்கப் போனயே . இப்ப மணி பத்து ஆகுது.தொகுதில எந்த

எந்தப் பகுதிக்குப் போன?


நம்ம தொகுதில கிராமங்கள் அதிகம். ஏமாந்தான்பட்டிக்கு வாக்குச்

சேகரிக்கப் போனேன். காலைலே பெண்கள் வாசல் பெருக்கிக்

கோலம் போட வர்வறவங்களப் பார்த்து வாக்குக் கேட்பதே எனது

திட்டம். ஆனால் என்னப் பார்த்ததும் அந்த ஊரில் உள்ள பெண்கள்,

"ஐயா, நீங்க செயிச்சா எங்க கிராமத்துக்கு என்னென்ன

செய்வீங்க?"னு கேட்டாங்க."உங்கள் தேவைகள் அனைத்தையும்

நிறிவேற்றுவேன்"னு உறுதி அளித்தேன்.


"சில தொகுதிகள்ல வாக்குச் சேகரிக்கச் செல்லும் வேட்பார்ளர்கள்

தேநீர் கடையில் தேனீர் தயாரிச்சுத் தர்றாங்க. தோசை, பிரியாணி

தயாரிச்சுக் கொடுக்க்றாங்க. சிலர் மசால் வடை, மெதுவடை

போட்டுக் கொடுக்கறாங்க. சிலர் தெருவைப் பெருக்கி வாக்குக்

கேட்கிறங்க. சிலர் மூட்டை தூக்கி வாக்கு கேட்கிறாங்க. சிலர்

துணி துவைச்சுக் கொடுக்கறாங்க. ஆரத்தி எடுக்கற பெண்களை

வாழ்த்தற மாதிரி தட்டுக்கு அடில ரூபாய் நோட்டைக்

கொடுக்கிறாங்க. நாங்க உங்ககிட்ட எதிர்பார்க்கிறது ஒன்னே

ஒன்னுதான்"னு தான்னு சொன்னாங்க.:


"என்னன்னு சொல்லுங்க அம்மா"னு கேட்டேன்.


"எங்க கிராமத்தில் நூறு வீடுகள் உள்ளது, வாசல் பெருக்கிக்

கோலம் போடற நேரத்தில வாக்குக் கேட்க வந்திருக்கிறீங்க. எங்க

நூறு வீடுகளின் வாசல்களைச் சுத்தமாப் பெருக்கி சாணி

தெளிச்சுக் கொடுங்க. கண்டிப்பா எங்க கிராமத்தில் உள்ள

முந்நூறு வாக்குகளும் உங்களுக்குத்தான்'ன்னு.சொல்லிட்டாங்க.


அப்பறம் என்ன செய்யறது. அவுங்க சொன்னபடி செய்ய மூணு

மணி நேரம் ஆச்சு. அந்த நூறு வீட்டுப் பெண்களும் வீட்டுக்கு நூறு

ரூபாய் வசூல் பண்ணி என் கையில் பத்தாயிரம் ரூபாயைக்

கொடுத்து என்னை வாழ்த்தி அனுப்பிட்டாங்கடா. ஒடம்பெல்லாம்

வலிக்குது. உங்க அம்மாவை சுடுதண்ணி ஒத்தடம் கொடுக்க்ச்

சொல்லுடா முட்டை.

அப்பா, நான் உன்கூட வந்திருந்தா அந்தப்

பொம்பளைங்களை ஒதச்சு இடுப்பை முறிச்சிருப்பேன். உன்னை

அவமானப் படுத்தின அவுங்களைப் பழிவாங்கமா விடமாட்டேன்.


மகனே முட்டை ரவி, நீ நாடறிந்த ரவுடி, நீ என் மகன்னு தெரிஞ்சா

எனக்கு ஒரு வாக்குக்குக்கூட கெடைக்காது, உன்

மேல நூற்றுக்கு மேல குற்ற வழக்குகள் நிலுவையில இருக்குது.

பத்துத் தடவை செயிலுக்கு போயி களி, அவிச்ச சுண்டல் எல்லாம்

தின்னு ஒடம்பத் தேத்தி காட்டெருமை மாதிரி இருக்கிற. உன்னை

மக்கள் பார்த்தா உன் தொலை உரிச்சு உப்புக் கண்டம்

போட்டுருவாங்க. நீயும் தொண்டர்களோட வந்திருந்தா நம்ம

எல்லோருக்கும் ஆம் ஆத்மி சின்னமான வாசல் பெருக்கும்

துடைப்பதிலேயே அந்த கிராமத்தில் இருக்கும் பெண்கள் எல்லாம்

மொத்து மொத்துனு மொத்தி விரட்டி அடிச்சிருப்பாங்க.மகனே

முட்டை ரவி தேர்தல் முடியும் வரை உன் ரவுடித்தனத்தை அடக்கி

வையுடா.


ச்சீ. பட்டிக்காட்டுப் பொம்பளைங்களுக்கு வாசல் பெருக்கி சாணி

தெளிச்சதைப் பெருமையாச் சொல்லற நீயெல்லாம் ஒரு அப்பன்.

வெக்கமா இருக்குது எனக்கு. தூ.. தூ.

எழுதியவர் : மலர் (31-Mar-24, 11:12 am)
பார்வை : 25

மேலே