விடியல் — அந்தாதி

விடியல் !
——-
விடியல் கிழக்கின்
வியப்பான எழுச்சி /
எழுச்சி எங்கெங்கும்
எழுப்பிடும் மகிழ்ச்சி /

மகிழ்ச்சி மாந்தரின்
மாறாத சிறப்பு /
சிறப்பு உழைத்திட
சீருடன் உதிக்கும் /

உதிக்கும் பகலவன்
உன்னத நம்பிக்கை /
நம்பிக்கை இளையோர்க்கு
நல்லவை வழங்கிடும் /

வழங்கிடும் வலிமையால்
வெல்லட்டும் வியனுலகு /
வியனுலகு உயர்ந்திட
விழைவோம் விடியல் !

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான். (12-Apr-24, 7:13 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 58

மேலே