புத்தாண்டு பொறக்கட்டும் பூமியெல்லாம் செழிக்கட்டும்

புத்தாண்டு பொறக்கட்டும் பூமியெல்லாம் செழிக்கட்டும்
==================================

புத்தாண்டு பொறக்கட்டும் பூமியெங்கும் செழிக்கட்டும் /
புதுமையாக விவசாயத்தில் தொழில்நுட்பம் வளரட்டும்/
சித்திரையில் நித்திரையில் இருக்கும் வானமே /
செழித்திட முழித்து மழையாக வந்துவிடு/

பருத்தியாக வெடித்திருக்கும் பூமி எங்கும்/
பருவ மழையாக பொழிந்து குணமாக்கு/
நீர்நிலைகளில் நிரம்பி உயரமான வரப்பில்/
நீர் உயர்ந்தால் நெல் உயர்ந்து /

குடி உயர்ந்து கோல் உயரும்/
குடிமக்களின் யாவருக்கும் பசித் தீர்க்கும்/
நவ தானியம் செழிப்பாக வளர்ந்து /
நயமிக்கச் சத்தான உணவுகளை உண்டு/

வந்துவிட்ட நோய்களை உணவால் விரட்டி/
வளமும் நலமுடன் மக்கள் வாழ்ந்திட/
சித்திரை மகளே வந்து அருள்புரிய /
சித்தமாக விளங்கி நித்தமும் வழிசெய்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (18-Apr-24, 12:24 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 17

சிறந்த கவிதைகள்

மேலே