தூக்கம் தொலைத்த கண்கள் பூத்த உன் கணவன் எழுதிய சில வரிகள் = 5

நீயும் நானும் சேர்ந்த தான்
பல உலகங்களை படைத்திடுவோம்
ஓரிரை துணையோடு


அவன் அருள் உள்ள பொழுது
என்னை வெல்ல முடியுமோ இப்பொழுது



ஒன்றே முடிவல்ல
உலகத்தை படித்திட
புத்தகம் போல் இணைந்திருப்போம் நூலகத்தில்

வாசகன் படிக்கும் நேரத்தில் மட்டும் பிரிந்து இருப்போம் சில நொடிகள்


விண் கல்லை போல விண்ணி கிழித்து மண்ணைத் துளைத்து
என் நெஞ்சம் என்ற பூ பூத்திருக்குள்

தீ மூடியவளே

முடியாமல் தவிக்கிறேன்
பொங்கி வலியும் நீரூற்றை போல அல்லாமல் எரி குழம்பு போல் ஊட்டுதே ஊற்றுதே ஊட்டுவது


தாங்குமோ என் தேகம்
அதனால் பல சோகம்
காக்க வைக்காத இந்த காகம்
எப்போ அடங்குமோ இந்த தாகம்
என்னையும் டிஆர் (TR) ஐ போல எழுத வைத்தவளே

இல்லன்னா தூக்கம் மறந்து

உங்க நினைத்தும் தூக்கம் வராமல் தவித்து

கண்கள் விழித்து விழித்து
மல்லி பூ பூத்தது போல் கண்கள் பூத்து
செய்ய வேண்டும் ஒரு மாலை
என் கண்களை வைத்து

கண்ணால் செய்த மாலையை அணிய ஆசைப்படுகிறாயோ


அதனால் என் தூக்கத்தை கலைக்கிறாயோ

தோட்டத்தில் பூக்காத பூக்களை
பூ மார்க்கெட்டில் கிடைக்காத பூக்களாய்

நீ விரும்பி விட்டாய்
என்றால்

விழித்திருப்பேன் என் கண்கள் பூத்துக் கொண்டிருக்கும் வரை

உன் தலையில் அமரும் காலம் வரும் வரை கண் மலராய்


மு. கா. ஷாபி அக்தர்
பூவை

எழுதியவர் : மு. கா. ஷாபி அக்தர் (21-Apr-24, 9:44 am)
சேர்த்தது : மு கா ஷாபி அக்தர்
பார்வை : 300

மேலே