அவள் தந்த விருந்து
அவள் கண்ணழகு எங்கண்ணுக்கு விருந்து
அவள் கார்க்குழல் தரும் வாசம்
எந்தன் நாசிக்கு விருந்து கன்னியவள்
கால்களில் கட்டிய சலங்கை ஒலி
எந்தன் செவிக்கு விருந்து அவள்
பேசினாள் அந்த இனிய பேச்சு
அன்பில் தோய்ந்து அமுதாய்ப் பாய்ந்து
என்னுள்ளத்தை நிறைத்த பேரமுதாம் விருந்தானதே
அவள் நான் கேட்காமலே தந்து என்னை
ஆட்கொண்ட விருந்தாம் இவை