கேளு நிலாவே
கேளு நிலாவே
🌖🌖🌖🌖🌖🌖
பெளர்ணமி நிலவு
பகலில் வந்ததோ/
தரிசனமே தந்து
தலையசைத்தே அழைத்ததோ/
காமனின் வீட்டு
கதவு திறந்ததோ/
மாமனின் உள்ளம்
மச்சினியை ஏற்றதோ/
கல்லெறிபட்ட நீரலையாக
கனவுகள் பிறந்ததே/
புல்வெளிப் பனிபோல
புல்லரிப்பு மேனியிலே/
மின்னல் தீண்டும்
மேகமாக கரைந்தே/
பன்னீராக மாறும்
பூவாக சிதைந்தே/
சொட்டும் தேனாக
சொல்லிடுவேன் காதலை/
தட்டிக் கழிக்காதே
கேளு நிலாவே/
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்