கனவுக் கவிதையாய் நீமலர்ந்தாய்

கவிதைத் தமிழோடு கைகோர்த்து நான்நடந்தேன்
கனவு விரித்த பாதையிலே
அமுதை பொழிந்தது அந்த வான்நிலவு
அன்நிலா ஒளியில் அழகுத் தேவதையாய் நீவந்தாய்
கையேடு கைசேர்த்து நாம்நடந்தோம்
நினைவில் புகுந்து நெஞ்சில் கலந்து
கனவுக் கவிதையாய் நீமலர்ந்தாய்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Apr-24, 4:38 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 94

மேலே