நாத்துநட வந்தவளே

நாத்துநட வந்தவளே
+++++++++++++++++
நாத்துநட வந்தவளே
சேத்துக்குள்ள கானம்பாடி/
காற்றோடு விட்டபாட்டு
காதுவந்து சேர்ந்ததடி/

ஆறடி ஆளடி
அழகில் தேரடி/
ஈரடிக் குறளாக
ஈர்த்தது குரலடி/

வசீகரிக்கும் வார்த்தையாளே
வார்ப்பாகி உறைந்தேனே/
பரிகாரம் பார்வையடி
பழையபடி திரும்பிடவே/

காதல் பேழைக்குள்
காளையனும் கோழையானேன்/
முதல் முத்தத்தில்
முளைத்திடுவேன் ஆலமாக/

மாமரத்துக் குயிலே
மறக்காதடியென் உயிரே/
ஏமாற்றினால் மயிலே
ஏறிடுவேன் கயிலை/

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (24-Apr-24, 3:33 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 34

மேலே