கண்ணால் ஈர்த்தாள் கிளியோபாத்திரா

கண்ணால்ஈர்த் தாள்கிளியோ பாத்திரா காலடியில்
மண்ணோடு தன்னை மகுடத்தை வைத்தனவன்
உற்றநல் நண்பன் உருவிய கத்தியால்
மற்ற செனட்டரும் மாற்றமின்றி சீசரை
சுற்றி வளைத்து குருதிசிந்த வீழ்த்தினர்
கற்பனை இல்லைநண் பா
சில வரலாற்றுக் குறிப்புகள் :--
உற்றநல் நண்பன் ---- புரூட்டஸ்
சீசரின் அரசவையில் புரூட்டஸ் மார்க் அந்தனி மற்றவரும்
ஆலோசனை தரும் செனட்டர்கள்
சீசர் ரோம் சாம்ராஜ்யத்தை எகித்திப்பிய பேரழகி கிளியோபாத்திராவின் காலடியில் கிடத்தி
தானும் விழுந்து கிடந்தான்
ரோம் பேரரசை காக்க செண்ட்டர்களில் கூட்டுச் சதி செய்து செனட் அவையிலே
ஒருவர்பின் ஒருவராக கத்தியால் குத்த கடைசியில் உற்ற நண்பன் புரூட்டசும்
கத்தியைப் பாய்ச்ச" நீயுமா புரூட்டஸ் பின் சீசர் விழட்டும் "என்று சொல்லி வீழ்ந்து மடிவான்
இது ஷேக்ஸ்பியரின் கற்பனை நாடகமில்லை .கண்ணாலும் பெண்ணாலும் விழுந்த
மாமன்னனின் குருதி வரலாறு