ஊர்க்குருவியின் நாட்டியம்

"காரியக்கார கல்லுக்குள்ள
கல்லடிச்சான் ஓட்டக்குள்ள !
மாளிகைக்கும் மண்வெட்டிதான்
மல்லாந்து படுத்தா தூக்கம் போச்சுதா !
அசடு வழிஞ்சு நின்னுருக்க
அசடா இருந்தா கில்லிருவன் !
கனவு நெனவு பலிக்கணும்மா
காளிங்கன் நடனம் பாத்திடணும் !
ஊருக்கு உபதேசம் கிடைச்சிருக்கு
கண்ணன் உபதேசம் அங்கு காணவில்ல !
தயிரு கடைஞ்ச ஆச்சிக்கு
பாற்கடல் கடைய தெரியாதா ?
ஜோடி புறாவுக்கு உணவிருக்கு
கோடி ரூபாய்க்கும் உணவிருக்கு !
அங்கு இங்கு பார்த்தாலும்
சோறு பதமா வெந்தாலும் !
சோதனைகள் பல நொந்திருக்கு
மரக்கிளையில் காக்கா கூட்டமுங்க
மாட்டிக்கிட்டா நரி தந்திரமுங்க !
சாமி ஆட நம்ம கைபொம்மை
சாதிக்க வேணும் கைப்பிடிக்குள்ள !"

எழுதியவர் : சு.சிவசங்கரி (4-May-24, 7:25 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 29

மேலே