முயற்சி கவிதை
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*தன்னம்பிக்கை*
*கவிதைகள்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
உரைக்கும் போது தான்
சந்தனம் மணம் வீசுகிறது...
உருகும் போது தான்
மெழுகுவர்த்தி ஒளி தருகிறது.....
எரியும் போது தான் கற்பூரம் தெய்வத்தின் முன்னால் காட்டப்படுகிறது....
சுடும் போது தான்
சங்கு வெண்மையாகிறது
செதுக்கும் போதுதான்
கல் சிலையாகிறது....
பட்டைத் தீட்டும் போதுதான்
வைரம் மதிப்பு பெறுகிறது....
மனிதனே!
நீயும்
"தடைகளைத் தாண்டும்" போதுதான்
வாழ்க்கை வளம் பெறுகிறது.......!!!
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
பொன்னை இழந்தாலும்
பொருளை இழந்தாலும்
மண்ணை இழந்தாலும்
மனையை இழந்தாலும்
சொத்தை இழந்தாலும்
சுகத்தை இழந்தாலும்
பணத்தை இழந்தாலும்
பந்தத்தை இழந்தாலும்
தொழிலை இழந்தாலும்
தோழனை இழந்தாலும்
நீ ஏழையே! அல்ல
உன்னிடமுள்ள
"தன்னபிக்கையை" இழக்காத வரை...!!
*கவிதை ரசிகன்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥