குழந்தைகள் தினம்

"நேரு மாமா வந்தாராம் !
எங்கள நேரா நில்லுனு சொன்னாராம்
நேர்படப் பேசுனு சொன்னாராம்
நேர்மையா இருனு சொன்னாராம்
நேர்த்தியா வாழுனு சொன்னாராம்
நேருஜி என் பெயருனு சொன்னாராம்
ரோஜா என்னோட அடையாளம்னு சொன்னாராம்
பூமிக்குள்ள நாமிருக்க
நமக்குள்ள உலகிருக்க
ஊரோடு ஒத்து வாழ கத்துக்கணும்
வீட்ட தூக்கி நம்ம நிறுத்தணும்
தப்பு பண்ணா ஒத்துக்கணும்
தப்பிக்க நினைச்சா மாட்டிக்கணும்
காலம் நம்ம கையில
காலால் நம்ம நடக்கையில
வாழ்வோம் உலகைச் சுற்றியே
பெறுவோம் என்றும் வெற்றியே
குழந்தைங்கன்னா விளையாடணும்
குழந்தையோடு நம்ம விளையாடணும்னு சொன்னாராம்
கைநிறைய மிட்டாய்ங்க கொடுத்தாராம்
கைய காட்டி டாடா சொன்னாராம் !"

எழுதியவர் : சு.சிவசங்கரி (4-May-24, 7:50 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 18

சிறந்த கவிதைகள்

மேலே