என் உசுருக்குள் உசரமாய் நீ

"என் உசுரே நீ மாமா ! உன்ன விட்டா எனக்கு யாரு மாமா !
ரோசாவ பறிக்குமுன்னே கருக விட்டதென்ன !
மல்லியப்பூ சூடிகிட்ட வாசமுந்தாந் தெரியலயே !
என் மாராப்பூ சேலைக்குள்ள உன் வாசமுந்தா சிக்கிக்கிச்சு
ஆடு கோழி வளத்து வந்த மந்தைக்குள்ள பூட்டி வச்சிருக்க
அட அத்தனையும் ஆக்கி வச்ச பக்குவமா சமைச்ச் வச்ச
சாப்பிடத்தான் நீ வேணும் கல்யாண பந்தி நீ போட வேணும்
கறிசோறு எனக்கு எறங்கவில்ல கரும்பு சாறு இனிக்கவில்ல
வாய்க்கு ருசி தெரியலயே வாய்க்கரிசி போட வருவியா மாமா !
வேட்டிய மடிச்சுக்கட்டி மல்லுக்கட்டி நின்னதென்ன !
இராப்பகலா காத்திருந்த பகல் கனவா போனதென்ன !"

எழுதியவர் : சு.சிவசங்கரி (22-Jun-24, 3:35 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 14

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே