நாணப்படுகிறாள் நதி

நாணப்படுகிறாள் நதி

ஆனந்தமாய் செல்கிறாள்
இந்த நதி
மேகங்கள் கருணை
காட்டியதோ?
மடியை அவிழ்த்து
கொட்டி கொடுத்துவிட்டாள்
மழையாக
துள்ளல் அலைகளாய்
இரு கரையிலும்
வீம்பாய் மண்ணை கரைக்கிறாள்
ஒட்டி உரசி கரையோர
செடி கொடிகளை உரசுகிறாள்
இடையிடையே
தன் வெண்மை சிரிப்பாள்
சுழிப்பை காட்டுகிறாள்
அலைகளுடன் ஆக்ரோசமாய்
ஆடிக்கொண்டிருக்கும்
பெரும் கடலை
கண்டவுடன்
எங்கிருந்துதான் நாணம்
வந்ததோ?
இடையை நெளித்து
வளைந்து சென்று
அவனில்
சங்கமித்து கரைந்து
போகிறாள்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (8-Jun-24, 12:02 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 52

மேலே