யோகம் தரும் யோகா
"இருக்கை பணிகள் என்றாலும்
இரு கை பணிகள் என்றாலும்
இரும்பு வளையமாய் வளைந்து வளைந்து போகிறேன்
இறுகி போன இதயம் கரைந்து போகவே !
இணையத்தில் கைகள் ஓடி ஆடி விளையாடும்
கணையத்தில் சர்க்கரை சடுகுடு ஓட்டம் ஓடும்
கழுத்து வலி கழுதை போல் உதைத்தாலும்
முதுகு வலி மூட்டைப்பூச்சி போல் முண்டியடித்து நின்றாலும்
கண்வலி கதகளி ஆடினாலும்
உடல் வலி வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாலும்
என் உடலும் மனதும் புன்னகைக்க வந்தது
யோகத்தைக் கொடுக்கும் யோகாசனம் !