விழுவது கேவலம் அல்ல
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*விழுவது கேவலம் அல்ல...*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நான்
விழுவதற்கு
விருப்பப்படுகிறேன்
விழாமல்
எழ முடியாது என்பதால்.....
விழுவது
கேவலம் என்று
நினைத்துத்தான் எழுவதற்கு
வழி தெரியாமல்
இருக்கின்றீர்கள்......
மழைத்துளி
கீழே விழாமல் போனால்
பயிர்கள் மேலே எழுமா ?
கண்ணீர் துளிகள்
கீழே விழாமல் இருந்தால்
அமைதி நெஞ்சில் வருமா ?
பழைய இலைகள்
கீழே விழுவில்லையென்றால்
புதிய இலைகள்
முளைப்பது எங்கே ?
நாம் கூட
விழுந்திடுவோம் என்று
குழந்தை பருவத்தில்
நடக்காமல் இருந்திருந்தால்
இன்று
தவழ்ந்து கொண்டு தான்
இருக்க வேண்டும்....
அவ்வளவு ஏன்
சூரியனின் கதிர்கள்
பூமியில் விழவில்லை என்றால்
புழு எது ? பூச்சி எது ?
நான் ஏது ? நீ ஏது ?
விழுந்து விட்டதற்காக
எழுவாமல் இருப்பதில்லை
கடல் அலைகள் .....
தேங்கி இருப்பதைவிட
ஓடும்போது இருப்பதைவிட
நீர் விழும் போது
அழகாக இருக்கும்
கவனித்து இருக்கிறாயா?
அதுதான் நீர் வீழ்ச்சி...
நிழல் விழவில்லை என்றால்
நீ எங்கே
இளைப்பாற்றுவாய்?
விதை விழவில்லை என்றால்
உயிரினங்கள்
எப்படி பசியாறும் ?
ஒரு முறையேனும்
விழுந்துப்பார்
எழுவது எப்படி? என்று
கற்றுக் கொள்வாய்....!
விழுவது கேவலம் அல்ல
எழுவாமல்
இருப்பதுதான் கேவலம்....!
*கவிதை ரசிகன்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥