அதிக மனிதர்கள் இருக்கின்றனர்

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*இந்த மனிதர்கள்...!*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

பூக்கள்
உதிர்வதற்குள்
மணம் வீசி விடுகிறது....

கனிகள்
அழுகுவதற்குள்
சுவை தந்து விடுகிறது.....

வானவில்
மறைவதற்கு
மகிழ்ச்சியை
தந்து விடுகிறது.....

நிலவு
தேய்வதற்குள்
ஒளி கொடுத்துவிடுகிறது ....

கதிரவன்
மறைவதற்குள்
வெளிச்சம்
கொடுத்து விடுகிறது......

இந்த மனிதர்கள் தான்
சாவதற்குள்
வாழ்வதே இல்லை....!!!

♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️

*அதிகம் உண்டு*

இந்த பூமியில்
பறக்க தெரியாத
பறவை என்று
ஒன்றில்லை.....

நீந்தத் தெரியாத
மீன் என்று
ஒன்றில்லை....

வளரத் தெரியாத
தாவரம் என்று
ஒன்றில்லை.......

ஓடத் தெரியாத
மான் என்று
ஒன்றில்லை.....

பாடத் தெரியாத
குயில் என்று
ஒன்றுமில்லை....

ஆட தெரியாத
மயில் என்று
ஒன்றில்லை.....

ஆனால்....

வாழத்தெரியாத
மனிதர்கள் இங்கு
அதிகம் உண்டு.....!!!

*கவிதை ரசிகன்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

எழுதியவர் : கவிதை ரசிகன் (10-Jul-24, 8:01 pm)
பார்வை : 39

மேலே