ஆண் பெண் நட்பு ?

🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

*ஆண் பெண் நட்பு..?*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

இன்றைய தலைமுறை
பரிசுத்தமான காற்றையும்
ஆரோக்கியமான நீரையும்
வளமான நிலத்தயைும்
மட்டும் அல்ல....
புனிதமான
ஆண் பெண் நட்பையும்
இழந்து வருகிறது.....

இன்று
ஆண் பெண் நட்பு என்றால்
பரிசோதித்துப்
பார்க்காமலேயே !
சந்தேக
வெள்ளைத் துணி சுற்றி
காம முத்திரையிட்டு
சீல் வைக்கப்படுகிறது....

கூடு என்றாலே
குலவி தான் இருக்குமா ?
ஏன் ?
வண்ணத்துப்பூச்சியாக
இருக்கக் கூடாதா ?

பஞ்சும் நெருப்பும்
பக்கத்தில் இருந்தால்
பற்றிக்கொள்ளும் என்று
சொல்பவர்களே.....!!!
பஞ்சை திரியாக்கி
நெருப்போடு
சேர்க்கும்போது
அது தீபமாகவில்லையா ?
நீ கை எடுத்து
வணங்கவில்லையா ?

ஆண் பெண் நட்பு
கொஞ்சம்
உடல் நலக் குறைவாக
இருக்கலாம்...
அதற்காக
பிணமாக எண்ணி
புதைக்க நினைப்பது
சரியா..... ?

நீரில் மூழ்கி
சாகிறார்கள் என்றால்
நீச்சல் அடிக்க
கற்றுக் கொடுக்க
வேண்டுமே தவிர...
நீர் நிலைகளையெல்லாம்
அழிக்க
முயற்சி செய்யக் கூடாது.....

வளர்க்கும்
விதத்தில் வளர்த்தால்
சிங்கம் புலி கூட
மனிதன் வாழலாம் என்று
நிரூபிக்கப்பட்டுள்ளது இன்று...

*கவிதை ரசிகன்*

🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

எழுதியவர் : கவிதை ரசிகன் (12-Jul-24, 8:39 pm)
பார்வை : 52

மேலே