காதலை சொல்லாதவள்
அன்பே
அழகிகள் மாநாட்டிற்கு
ஐ நா அழைத்தும் செல்லாதவள் நீ
தன் பெயரை
தேவதை என்று
யாரிடமும் வெளியே
சொல்லாதவள்
நீ
தன் அழகால் இளைஞர்களை கவர்ந்து கொல்லாதவள் நீ
காதலெனும் பாடத்தை பூப்பெய்தும்
கல்லாதவள் நீ
வீதியில் நடக்கையில் யாருக்காகவும் நில்லாதவள் நீ
காதல் என்னும்
வலையில் இளைஞர்களைத் தள்ளாதவள் நீ
பிரம்மனே வியக்கும் அழகு இருந்தும் மமதையில் துள்ளாதவள் நீ
ஊர் கதைகளை வாயில் போட்டு மெல்லாதவள் நீ
ஆண்களின்
இள நெஞ்சை வேல்விழியால்
கிள்ளாதவள்
நீ
தான் நயன்தாராவின் தங்கை என்ற கர்வம் கொஞ்சமும்
இல்லாதவள் நீ
பொறுக்கிகளுக்கு
மட்டும் பொல்லாதவள் நீ
உலக அழகி பட்டத்தை கலந்து கொள்ளாமல் வெல்லாதவள் நீ
எவ்வளவு முயன்றும் உன் மனதை அள்ளாதவன் நான்