வாழ்க்கை சுமை இல்லை, சுவை

வாழ்க்கை என்ற இந்த வரட்சியான பாலைவனத்தில்!
துயரம் என்ற பெட்ரோலில் ஓடுகின்ற ஓட்டை வாகனத்தில்!
மெய்யான மகிழ்ச்சியே இல்லாத தினசரி போராட்டத்தில்!
பாலைவனச் சோலை ஒன்று இங்கு உண்டு என்றால், அது
நகைச்சுவையைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?
விருந்து என்றால் பாயாசமாக இனிப்பது நகைச்சுவை!
பட்டினி என்றாலும் உள்ளம் ருசிப்பது நகைச்சுவை!
உடல் வாடினால் மனதை ஊக்குவிப்பது நகைச்சுவை!
மனம் துவண்டாலும் உடலை நிமிர்த்துவது நகைச்சுவை!
இன்பங்கள் சுரக்க நகைச்சுவை!
துயரங்கள் மறக்க நகைச்சுவை!
அறுசுவையையும் ஒருங்கே அளிக்கும் நகைச்சுவை!
தினம் இதை சுவைத்தால், வாழ்க்கை சுமை இல்லை, சுவை!

ஜாய்ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (23-Jul-24, 9:28 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 79

மேலே