கார்கில் போர் வெற்றி தினம்

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

*கார்கில் போர்*
*வெற்றி தினக் கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

பாகிஸ்தான்
பங்காளிகளால்
அழிக்கப்பட்ட
நம் தாய்நாட்டின் எல்லைக்கோடு
நமது இராணுவவீரர்களின்
இரத்தத்தால்
மீண்டும் வரைந்த
புனித நாள்.......

வாழ இடம் கொடுத்த
நம்மையே !
ஆள நினைக்கும்
அடிமைகளுக்கு......
"அடுத்த யுகத்திலும்
அது நடக்காது" என்று
வெற்றி கரத்தால்
அடித்துச் சொன்ன
அற்புதமான நாள்....

மகாபாரத போர் கூட
18 நாள் தான் நடந்தது..
நம் பாரத போர்
60 நாள் நடந்தது....

என் வீரர்களே!
போர் இரவும் பகலும்
இடைவிடாது நடந்ததே !
நீங்கள் எப்போது
உண்டியிருப்பீர்கள் ?
எப்போது
உறங்கியிருப்பீர்கள் ?

இயந்திரத்துப்பாக்கிய
இதயத்தில் தாங்கி மட்டுமல்ல
"எதிரியின்
துப்பாக்கிக் குண்டுகளை
எந்த நேரத்திலும்
உங்கள் இதயம்
தாங்கவேண்டியிருக்கும்" என்று
தெரிந்தும் தெறிக்க விட்டு
முன்னேறி சென்றீர்களே!
அந்தத் தைரியத்தை
"அன்னைத் தாய்ப்பாலிலிருந்து பெற்றாயோ .....?"

527 வீரர்களே!
நீங்கள்
வீரமரணம் அடைந்து
மண்ணில் விழவே ! இல்லை...
"எங்கள்
மனதில்" தான் விழுந்தீர்கள்....!
எங்கள் மனம்
உங்களுக்கு
"கல்லறையாகவில்லை
கருவறையாகியுள்ளது... !"

உங்கள் தியாகங்களுக்கு
எத்தனை எத்தனை
தீ யாகங்கள் நடத்தினாலும்
அது ஈடாகாது.....

புலியையே
முறத்தால் விரட்டியடித்த
மரபு பெண்கள் வயிற்றில
பிறந்தவர்கள் நீங்கள் என்பது
விரட்டி அடித்த பூனைகளுக்கு
எப்படி தெரியும்...?

ஒவ்வொரு ஆண்டும்
உங்களுக்கு
அஞ்சலி செலுத்தவே
எழுந்து நிற்கிறோம்...!
என்று உங்களைப் போல்
அஞ்சா நெஞ்சத்துடன்
எழுந்து நிற்கப்போகிறோமோ...?

வாழ்க உங்கள் புகழ்.....!
வளர்க உங்கள் பெருமை..!

*கவிதை ரசிகன்*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

எழுதியவர் : கவிதை ரசிகன் (23-Jul-24, 7:46 pm)
பார்வை : 201

மேலே