பெரியார் பிறந்த தினக் கவிதை

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பெரியார் பிறந்த*
*நாள் கவிதை....*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

எல்லா ஊரிலும்
பகுத்தறிவோடு
மனிதர்கள் பிறந்தார்கள் ...
ஈரோட்டில் தான்
பகுத்தறிவே
மனிதனாகப் பிறந்தது.....

முதுமையில்
என்ன செய்ய முடியும் என்று
கேட்பவருக்கு
இவரது
வாழ்க்கை வரலாறு
ஒரு சாட்டையடி அலல
ஒரு நூறு சவுக்கடி...

மூடநம்பிக்கைகளை
வேரோடு
வெட்டி எடுக்க
போராடிய கோடாரி....

கடவுள் பெயரில்
நடக்கும் தீய
செயல்களை
குத்தி கொன்ற கிடாரி...

கடவுள் இருக்கிறது என்று
சொன்னவர்கள் எல்லாம்
கடவுளை
கலங்கப்படுத்தினர்
கடவுள் இல்லை என்று
சொன்ன இவரால்தான்
புனிதப்படுத்தப்பட்டன.....

மக்களின் களர்மனதை
தன்னுடைய
சொற்பொழிவு ஏரால் உழுது
பகுத்தறிவு பயிர் செய்த
வெண்தாடி உழவன்....

கல்லாகக் கிடந்த
மனிதர்களை தன்
சொல் உளியால் செதுக்கி
சிலையாக்கியவர்....

தந்தை பெரியார்
ஒரு பெருங்கடல்
கரையோரம் தேடினால்
சங்கு தான் கிடைக்கும்
ஆழத்தில் தேடிப்பார்
முத்துகள் கிடைக்கும்.....

அவர்
செய்வது எல்லாம்
சரியானது என்று
சொல்பவர் அல்லர்
சரியானதைச் செய்தவர்.......

பெட்டி பெட்டியாக
தருவார்கள் என்று
மூத்திரச்சட்டியைப்
பிடித்துக்கொண்டு
மூச்சு விடாமல் மேடையில்
பேசவில்லை....
மூடநம்பிக்கை என்னும்
மூத்திரச்சாக்கடையிலிருந்து
மக்களை
மீட்டெடுக்கவே
அவர் பேசினார்.....!

சரிந்த குடலைக் கட்டிக்கொண்டு
தள்ளாத வயதிலும்
தளராமல் பேசியதற்கு காரணம்...
அவருடைய சந்ததிக்கு
சொத்துகளைக் சேர்க்க அல்ல..
பகுத்தறிவற்று
விலங்குகளாய்
பணக்காரர்களிடம்
அடிமைப்பட்டுக் கிடக்கும்
ஏழை எளிய மக்களுக்கு
உரிமைகளைப்
பெற்றுக் கொடுப்பதற்கே....!

தெய்வம் கூட
பெரியாரைத் தான்
விரும்பியிருக்கிறது...
இல்லையென்றால்
96 வயது வரை
விட்டு வைத்திருக்குமா..?

அவர் ஒரு தீவிர
தெய்வ மறுப்பாளர் அல்லர்...
மக்களுக்கு
தீங்கு ஏற்படும் என்றால்
அந்தத் தெய்வத்தையே
எதிர்க்கும் பண்பாளர்.....

*கவிதை ரசிகன*

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

எழுதியவர் : கவிதை ரசிகன் குமரேசன் (17-Sep-24, 9:05 pm)
பார்வை : 8

மேலே