வேதம்

********
ஒழுகிடு நதியெம துடலொடு பாயும்
ஒருசிறு துளிசல முயிரொடு தோயும்
அழுகிடு நிலைவர அதுவழி நோயும்
அவரவ ருறுகிற வினையென வாயும்
இழுபடு மெனவிறை யெழுதிய தாயும்
இகமிதை விதியென வறிவதி லாயும்
பழுதுறு கிறவகை பழிசொலு வாயும்
பதறிட வருநிலை பயமொடு வோயும்
*
வளிவிட வழிவிடு வகைசெயு வானின்
வழிசெல வுளதென வலிகொளு வானின்
தெளிவொடு தெரிவதை தெரிவிடு வானின்
திசையுட னெழுவது தினசரி வானின்
வெளிவரு கிறபரி தியினொளி யாயுன்
வெளியினை வரவிடு விதியது வாயின்
களிகொளு மிதயமு முனதென வேதன்
கவலைக ளழிவுற வெழிலுனை வேயும்
*
பயனிலை யெனுமொரு பயமொடு வாழப்
பழகிய தனைவிடு பலனுறு வாகும்
கயமையி லுழவிடு முலகித னோடு
கனவுக லெழுமது கவிதைக லாகும்
வயதொடு வருகிற தெதனிலு மாடி
வருவதி லுறுவது அனுபவ மாகும்
சயனமெ னமரண முறுவது மான
சகலமு முடையதை சகியது வேதம்
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (2-Aug-24, 2:03 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 75

மேலே