டெலிபதி தளபதி

தளபதி: ஏம்பா டெலிபதி, ஊர்ல நாட்டுல எங்கே பார்த்தாலும் போலி சாமியார்கள் அதிகமாகி வருகின்றனர். எவன் உண்மையான சாமி எவன் போலி சாமி என்றே தெரியவில்லை.
டெலிபதி: தளபதி, இப்போ ஒண்ணு கேக்கறேன். உனக்கு தெரிந்த உண்மை சாமி யாரையாவது ஒருவரைச் சொல்லு.
தளபதி: அப்படி யாரும் இல்லை
டெலிபதி: அப்புறம் ஏன், சந்தேகம். எல்லாருமே போலி சாமியார்கள் தான்.
தளபதி: ஆமாம் டெலிபதி. சரியாகத் தான் சொன்னாய். பொது மக்களே! இனி போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள். உண்மை சாமி யாரையாவது கண்டால் மட்டும் ஏமாறுங்கள்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (5-Aug-24, 7:53 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 38

மேலே