பெயர் சொற்கள் ஆன வினைச் சொற்கள்

தாத்தா
பேரப் பிள்ளைகள் இவரிடம் அடிக்கடி ' அதைத் தா...இதைத் தா.. வாங்கித் தா..தா.தா' என்று நச்சரிப்பதால் இவர் ஆனார் தாத்தா.

பாட்டி
பேரக் குழந்தைகளை (ராகபாவமின்றி) பாட்டுப் பாடிப், பாடித் தூங்கவைக்க முயற்சி செய்யும் மூதாட்டி என்பதாலும், அதனால் போரடித்துப் போய், வேறு வழியின்றி பேரப்பிள்ளைகள் தூங்குவதாலும், "பாட்டு மூதாட்டி" என் அழைக்கப்பட்டு பின்னர் சுருக்கமாக, பாட்டி என்ற பட்டப் பெயரை பெற்றார்.

மருமகன்
மாமியார் என்ன சொன்னாலும் மறுக்காமல் தலையை ஆட்டுவதால், மறுக்காத மக்கு என்று ஆரம்பித்து, பின்னர் மறுக்காத என்பது மருவாக மாறி, அதைப் போலவே மக்கு என்பது மகன் என்று தப்பாக உச்சரிக்கப்பட்டு, இருபதாம் நூற்றாண்டில் மருமகன் என்று ஆகிவிட்டது. அவசர தேவைக்கு மாமியார் வீட்டில் மாப்பும் (தண்ணீரைக் கொண்டு தரையை துடைப்பது) போடக்கூடியவர் என்பதால், இவருக்கு மாப்பிள்ளை என்று இன்னொரு புனைப்பெயரும் உண்டு.

மருமகள்
மாமியாருக்கு பொதுவாக மறுப்பு தெரிவிக்கும் பெண் என்ற காரணத்தால் மறுப்புமகள் என்று சிறப்பு பெயர் இவருக்கு. மேலே குறிப்பிட்டது போல மறுப்புப் பெண் என்பது , பெயர் மருவி, திரிந்து 'மருமகள்' என்ற பெயர் இந்த நூற்றாண்டில் கையாளப் படுகிறது.

ஜாய்ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (13-Aug-24, 7:20 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 51

சிறந்த நகைச்சுவைகள்

மேலே