சொல் பெண்ணே !
💔💔💔💔💔💔💔💔💔💔💔
       *சொல் பெண்ணே !*
        படைப்பு *கவிதை ரசிகன்*
                  குமரேசன்
💔💔💔💔💔💔💔❤🔥💔💔💔
என் காதல் நிலவே 
காதல் நிலவே  நில்..!
என் கேள்விக்கு 
பதில் என்ன  சொல்.......!
நிலா போல் 
நீ மௌனமாகச் சென்றாலும் 
மேகம் போல் 
உன் பின்னால் வருவேனே..... !
ஆறு போல் 
அமைதியாகப் போனாலும் 
கரைப் போல் 
உன்னைத் தொடர்வேனே....!
நிலவாகப் பிறந்தால் 
வானத்தோடு சேர வேண்டும்.... நதியாகப் பிறந்தநால் 
கடலோடு சேர வேண்டும்......
மணமாகப் பிறந்தால் 
காற்றோடு சேர வேண்டும்
பெண்ணாகப் பிறந்தால் 
ஆணோடு சேர வேண்டும் 
அந்த ஆண் நானாக கூடாதா...? 
மரண வலி தான் 
பெரியது என்று 
எண்ணி இருந்தேன் 
அடி பெண்ணே !
உன் மௌனத்தை 
அறியும் வரையில்....... 
இரும்பு தான் 
வலிமையானது என்று
எண்ணியிருந்தேன் 
அடி பெண்ணே !
உன் இதயத்தை 
காணும் முன்னே....... 
உன் மௌனம் என்ன 
விருப்பத்தின் அறிகுறியா ?
வெறுப்பின் மறுமொழியா ?
நீர் இன்றி 
நான் வாழ்ந்தாலும் 
நீ இன்றி 
வாழ மாட்டேன்....... 
சுவாசிக்காமல் 
நான் வாழ்ந்தாலும் 
உன்னை நேசிக்காமல் 
வாழ மாட்டேன்....
         *கவிதை ரசிகன்*
💔💔💔💔💔💔💔💔💔💔💔
 
                    

 
                             
                            