ஐசா ஐலசா
டேய் முத்து, யாருடா அவன் எதிர் வீட்டில 'அய்சா, அய்சா'னு
சொல்லிக் கொஞ்சிட்டு இருக்கிறான்.
@@@@@@
யாரா? நம்ம பங்காளி மகன் மகேசு தான். அவன் மனைவிக்குப்
போன மாசம் பெண் குழந்தை பிறந்துச்சு இல்லையா அந்தக்
குழந்தைக்கு 'ஐஷா'னு இந்திப் பேரை வச்சுக் கொஞ்சிட்டு
இருக்கிறாங்க.
@@@@@@@@@@@@@
ஓ.... அப்பிடியா? அப்ப நம்ம சுக்கேசுக்குப் போன மூனு நாளைக்கு
முன்னாடி பொறந்த பெண் குழந்தைக்கு 'ஐலசா'னு பேரு
வையுங்கடா. 'ஐசா' இந்திப் பேருன்னா 'ஐலசா'வும் இந்திப் பேருனு
சொன்னா கண்டிப்பா நம்ம சனங்க "ஐலசா அருமையான,
சுவீட்டான இந்திப் பேரு"னு பாராட்டுவாங்கடா.
@@@@@@@@@@@@@
சரிம்மா. அந்தப் பேரையே வச்சிடலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Aisha (आयशा) = ‘Love’, ‘life’, ‘prosperity’