கரைந்து போனேன்

கரைந்து போனேன்.....!
22 / 08 / 2024

கண் மூடிக் கிடந்தேன்...
பெண்மையின் வாசம்
மென்மையாய் எனைத் தாக்கியது.
மெல்ல கண் திறந்தேன்.
என் முகத்துக்குள் முகமாய்
உன் முகம்
என் மூக்கும் உன் மூக்கும்
ஒன்றோடொன்று உரசிக் கொண்டிருந்தது.
உன் கண்களோ
பாதி மூடியும் மூடாமலும்
சொரிகிக் கிடந்தது.
உன் ஈர உதடுகளோ
என் உதடுகளை
தொட்டும் தொடாமலும்
துடித்துக் கொண்டிருந்தது.
தாகத்தினால் உன் மேனி
குளிர்ந்து கிடந்தது.
மோகத்தினால் என் மேனி
சூடேறி தகித்தது.
அனிச்சையாய் என் கைகள்
உனை வளைத்து
என்னோடு இறுக்கியது.
மார்பின் இடைவெளி
காற்று புகாமல்
இறுகிக் கிடந்தது.
வாய் பேச்சு மரணித்து
மௌன மொழி
அங்கே அரங்கேறியது
எங்கே இந்த தருணம்
மறைந்து விடுமோ
என அஞ்சி
என் கண்களில்
உள்வாங்கி மீண்டும்
கண் மூடிக் கிடந்தேன்.
மூடிக்கிடந்த சொர்க்க வாசல்
படீரென திறந்தது....
வானில் சிறகடித்து பறந்து
காற்றில் கரைந்து போனேன்.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (22-Aug-24, 6:15 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : karainthu poanen
பார்வை : 204

மேலே