உனதுதமிழ்ச் சேவை உணர்வை பீ பீ சி மனமுவந்து பேசிடுமே

தினம்வரும் தென்றல்நீ சென்றது எங்கே
எனைமறந்தாய் ஏன்சொல் இளவேனில் போதில்
மனம்மாறிச் சென்றவளை மாற்றி கவிதை
புனைந்திட கூட்டிவர சென்றாயோ தென்றல்
உனதுதமிழ்ச் சேவை உணர்வைபீ பீசி
மனமுவந்து பேசிடு மே
---- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
பீ பீ சி ---BBC ---BRITISH BROADCASTING CORPORATION
அதன் தமிழோசை மிக பிரபலமான தமிழ்ச் சேவை
ஆங்கிலச் சொல் இங்கு நன்றியுடன்