குடிகாரப் பொண்ணா இருக்கப் போகுது

ஏண்டா சின்னத்தம்பி, பெரியதம்பி நீங்க இரண்டு பேரும் பள்ளிப்


படிப்பைப் பாதியிலே நிறுத்திட்டு நம்ம இருபது ஏக்கர் நிலத்தில்


வேளாண்மையைப் பார்த்திட்டீங்க. உங்க பையங்களைப் பெரிய

பெரிய படிப்பெல்லாம் படிக்க வச்சுட்டீங்க.பெரியதம்பிக்கு ஒரே


பையன். தனகேசு. அவனுக்கு நீங்க இரண்டு பேரும் பொண்ணுப்


பார்க்கப் போயிட்டு வந்தீங்க. வந்து அரை மணி நேரம் ஆகுது,


ஏண்டா அதைப் பத்தி ஒண்ணும் சொல்லாம இருக்கறீங்க.


@@@@@@@@@@@

அம்மா, சென்னைக்குத் தான் போனோம். அழகான பொண்ணு.

நம்ம தனகேசுக்குபொருத்தமா இருக்கும். மாசம் இரண்டு இலட்சம்


சம்பளம் வாங்குது. ஆனா பொண்ணோட பேரு தான் கொஞ்சம்

ஒதைக்குது.


@@@@@@@@@@@@


பொண்ணு பேரு என்னடா?

@@@@@@@@@@@@@

பொண்ணுப் பேரு 'சோமா' (ஷொமா).

@@@@@@@@@@@

ஐய்யோ, பொண்ணுப் பேரு 'சோமா'வா? அந்தக் காலத்தில் நம்ம

முன்னோர்கள் 'சோமா', 'சூரா'ங்கிற மதுபானங்களைக்

குடித்தார்களாம். இந்தப் பேருள்ள பொண்ணு சரிப்படாதுடா


சின்னத்தம்பி, பெரியதம்பி. பெரிய நகரங்கள்ல வேலை பார்க்கிற

பொண்ணுங்கள்ல சிலர் மதுபானம் எல்லாம் குடிக்கறாங்களாம்.

தொலைக்காட்சிசெய்தில சொலறாங்க. இந்தப் பொண்ணு பேரே

சரியில்லை. இது குடிக்கிற பொண்ணா இருந்தா..குடும்பத்துக்குச்

சரிப்படாது. என் பேரன் தனகேசுவையும்குடிக்க வச்சிருவாடா.

. இந்தா 'சோமா' வேண்டாம்டா. வேற நல்ல

இந்திப் பேரா உள்ள பொண்ணைப் பாருங்கடா. தமிழ்ப் பேருள்ள

பொண்ணுங்க வேண்டவே வேண்டாம் நம்மள யாரும்

மதிக்கமாட்டாங்க. நாம மதிப்பு மரியாதையோடஇருக்கணும்னா

இந்திப் பேரு உள்ள

பொண்ணு தான் நம்ம பெரிய தம்பிக்கு மரும்களா வரணும்.

@@@@@@@@@@@@

சரிம்மா. நீங்க சொல்லறபடியே அழகான இந்திப் பேருள்ள தமிழ்ப்

பொண்ணாப் பார்க்கிறோம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Name Shoma generally means Successful lady or Glorious or Famous is a Feminine (or Girl) name. Name Shoma has Indian origin and person with this name are mainly Hindu by religion. Name belongs to Rashi Vrushik (Scorpio) and Nakshatra (lunar mansion) Jyeshta.


.

எழுதியவர் : மலர் (5-Sep-24, 7:14 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 16

சிறந்த கவிதைகள்

மேலே